அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், என்னென்ன படங்கள், எந்தெந்த பிரிவில் விருதை வாங்கியுள்ளது ஒரு பார்வை.
சிறந்த அனிமேஷன் படம் : ஆஸ்கர் விருது விழாவில் முதலாவதாக சிறந்த அனிமேஷன் பட விருதை கில்லர்மோ டெல் டோரோவின் பினோச்சியோ படம் கைப்பற்றியது.
சிறந்த துணை நடிகர் : எவ்ரிவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்ற படத்தில் நடித்ததற்காக கே ஹுய் குவான் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.
சிறந்த நடிகை: எவ்ரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக ஜேமி லீ கர்டிஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
சிறந்த ஆவணப்படம் : நவல்னி சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதை தட்டிச் சென்றது.
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் : ஆன் ஐரிஷ் குட்பை (An Irish Goodbye) திரைப்படம் சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
சிறந்த ஒளிப்பதிவாளர் : ஜேம்ஸ் ஃப்ரெண்ட் “ஆல் க்யட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட்” திரைப்படத்தில் ஒளிப்பதிவு செய்ததற்காக அகாடமி விருதைப் பெற்றார்.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் : சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான அகாடமி விருதை “தி வேல்” வென்றது.
சிறந்த ஆடை வடிவமைப்பு : சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான அகாடமி விருதை பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர் படத்தில் பணியாற்றிய ரூத் கார்ட்டர்க்கு வழங்கப்பட்டது.
சிறந்த சர்வதேச படம்: ஆல் க்வைட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரண்ட் படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.
சிறந்த ஆவணப்பட குறும்படம்: இந்தியாவின் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான விருதை வென்றது.
சிறந்த அனிமேஷன் குறும்படம்: “தி பாய், தி மோல், தி ஃபாக்ஸ் அண்ட் தி ஹார்ஸ்” சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான அகாடமி விருதைப் பெற்றது.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது: கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர் ஆகியோர் “ஆல் க்வைட் ஆன் தி வெஸ்டர்ன் ஃப்ரண்ட்” திரைப்படத்தில் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான விருதை வென்றனர்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருது : ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் ஆகியோர் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் விருதை வென்றனர்.
சிறந்த அசல் திரைக்கதை: டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாடமி விருதை “எவ்ரிதிங் எவிவேர் ஆல் அட் ஒன்ஸ்” வென்றனர்.
சிறந்த தழுவல் திரைக்கதை விருது : சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருது “Women Talking” படத்துக்கு கிடைத்துள்ளது.
சிறந்த அசல் பாடல் : ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் சிறந்த அசல் பாடலுக்கான அகாடமி விருதை வென்றது.
சிறந்த ஒலிக்கான அகாடமி விருது : டாப் கன்: மேவரிக் சிறந்த ஒலிக்கான அகாடமி விருதை வென்றது. மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் எச். மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோர் விருதை பெற்று கொண்டனர்.
சிறந்த எடிட்டிங் விருது: சிறந்த எடிட்டிங் விருதை பால் ரோஜர்ஸ் வென்றார். எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) படத்திற்காக இந்த விருதை பெற்று கொண்டார்.
சிறந்த இயக்குநர்: எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்டேனியல் க்வான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் ஆகியோர் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்கான சிறந்த இயக்குநர் அகாடமி விருதைப் பெற்றனர்.
சிறந்த நடிகர் : பிரெண்டன் ஃப்ரேசர் ( Brendan Fraser) தனது முதல் ஆஸ்கார் விருதை தி வேல் படத்திற்காக வென்றார்.
சிறந்த நடிகை : எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once) திரைப்படத்தில் மிச்செல் யோவின் ( Michelle Yeoh ) நடிப்பு சிறந்த நடிகைக்கான விருதை முன்னணி பாத்திரத்தில் வென்றது.