டெல்லி: லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என மக்களவையில் பாஜக தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இனால், அவை மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய முதல் நாளிலேயே முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை தொடங்கியது. அவை தொடங்கியதும் முதலாவதாக, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதை […]