ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வகையில் ஒவ்வொன்று மீதும் தனி ஈர்ப்பு இருக்கும். அது போல பெண்கள் என்றாலே நினைவுக்கு வருவது ஆபரண தங்க நகைகள் தான். அதுவும் குறிப்பாக வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சுப காரியங்களுக்கும் பெண்கள் ஆசையாக தங்க நகைகளை அணிந்து கொள்வது என்பது நமது தமிழ்நாட்டு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்த வண்ணம் உள்ளது..இன்றும் உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 55 ரூபாய் உயர்ந்து, ரூ.5,325-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, ரூ.42,600-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,317-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் உயர்ந்து, ரூ.4,362-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 68,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ரூ.69,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.