The Elephant Whisperers: நம்ம முதுமலை தம்பதி பொம்மன், பெள்ளி, ரகு கதைக்கு தான் ஆஸ்கர் கிடைச்சிருக்குனு தெரியுமா?

95வது ஆஸ்கர் விருது விழா இந்தியர்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது ஆகும். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.

Naatu Naatu Oscars: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடல்: இந்திய வரலாற்றில் புது சாதனை

மேலும் கார்த்திகி கொன்சால்வஸ் இயக்கத்தில், குனீத் மோங்கா தயாரிப்பில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான The Elephant whisperers ஆவண படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் தான் The Elephant whisperers படத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் தொடர்பு இருப்பதை அறிந்த தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். யானை ரகு மற்றும் ஒரு தம்பதி பற்றிய கதை தான் இந்த The Elephant whisperers.

The Elephant Whisperers Oscars: ஆஸ்கர் விருது வென்ற சூரரைப் போற்று பட தயாரிப்பாளர் குனீத் மோங்கா

அந்த தம்பதி வேறும் யாரும் இல்லை, தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருக்கம் ஆசியாவின் மிகப் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமில் வேலை செய்யும் பழங்குடியினத்தை சேர்ந்த பொம்மன் மற்றும் அவரின் மனைவி பெள்ளி தான்.

தாயை பிரிந்து சுற்றித் திரியும் யானைகளை பராமரித்து வருகிறார்கள். படத்தில் வந்த யானை ரகுவின் கதை இது தான்.

கடந்த 2017ம் ஆண்டு தாயை பிரிந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் காயங்களுடன் அலைந்த ஆண் யானைக் குட்டி தான் அந்த ரகு.

தேனிக்கனிக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கியதில் ரகுவின் தாய் இறந்துவிட்டது. இதையடுத்து ஊருக்குள் புகுந்த ரகுவை நாய்கள் கடித்ததில் காயம் அடைந்தது. 3 மாதமே ஆன ரகு பிழைக்காது என்று கூறிவிட்டார்கள். ஆனால் பொம்மனும், பெள்ளியும் தேனிக்கனிக்கோட்டைக்கே சென்று அங்கு 15 நாட்கள் தங்கி ரகுவுக்கு சிகிச்சை, உணவு அளித்து குழந்தையை பார்ப்பது போன்று கவனித்திருக்கிறார்கள். அவர்களின் கவனிப்பால் குணமடைந்தது ரகு. அதன் பிறகே முதுமலை யானைகள் முகாமுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

பொம்மனும், பெள்ளியும் தான் அந்த யானைக்கு ரகு என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அப்பொழுது தான் கார்த்திகி அங்கு சென்று பொம்மன், பெள்ளி, ரகு கதையை இரண்டு ஆண்டுகளாக ஷூட் செய்திருக்கிறார். ரகுவுக்கு ஷாம்பு போட்டு குளிக்க வைத்திருக்கிறார்கள். பாட்டிலில் பால் கொடுத்திருக்கிறார்கள்.

பெள்ளியை தன் சொந்த தாயாக நினைத்திருக்கிறது ரகு. அதுவும் பெள்ளி தான் பாட்டிலில் பால் கொடுக்க வேண்டுமாம். இல்லை என்றால் ரகு குடிக்காதாம். தாயின் அருகில் படுப்பது போன்று பெள்ளியின் அருகில் படுத்து தூங்குமாம் ரகு.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பெள்ளிக்கு தெரியாமல் அவர் சாப்பாட்டை திருடி சாப்பிட்டு எஸ்கேப் ஆவது, அவர் மீது தும்பிக்கையை போட்டு தூங்குவது என செம சேட்டைக்காரனாம் ரகு. ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ரகுவை வேறு ஒரு பாகனிடம் கொடுத்துவிட்டார்களாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.