‛தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: விசாரணை குழு அமைச்சாச்சு: திமுக எம்பிக்கு மத்திய அமைச்சர் பதில்| ‛Attack on Tamil Nadu students: Ministry of Inquiry Committee: Union Ministers reply to DMK MP

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‛டில்லி நேரு பல்கலை.,யில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது’ என லோக்சபாவில் திமுக எம்.பி ஆ.ராசா கேள்விக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்தார்.

latest tamil news

புதுடில்லியில் உள்ள ஜே.என்.யு., எனப்படும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில், தமிழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் தாக்கப்பட்டு காயமுற்றார். இது தொடர்பாக பார்லிமென்ட் லோக்சபாவில் திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பினார்.

latest tamil news

இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசியதாவது: டில்லி நேரு பல்கலை.,யில் தமிழக மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து 4 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு பல்கலை.,யில் மீண்டும் இயல்புநிலை திரும்பியுள்ளது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.