கடந்த ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் தற்போது ஆஸ்கார் விருதினை வென்றிருப்பது இந்தியர்களை பெருமையடைய செய்திருக்கிறது. ரிஹானாவின் லிஃப்ட் மீ அப் ஃப்ரம் பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர், டெல் இட் லைக் எ வுமன், ஹோல்ட் மை ஹேண்ட் ஃப்ரம் டாப் கன்: மேவரிக் மற்றும் திஸ் இஸ் லைஃப் ஃப்ரம் எவ்ரிவேரிக் ஆல் அட் ஆகியவற்றிலிருந்து ரிஹானாவின் லிஃப்ட் மீ அப் பாடலை தோற்கடித்து சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் விருது பெற்றுள்ளது. ஆர்ஆர்ஆர் படக்குழு தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி கொண்டு இருக்க, இந்த பாடலை ஆஸ்கார் மேடையில் நடிகை தீபிகா படுகோனே தொகுத்து வழங்கினார்.
நடிகை பெருமையாக தொகுத்து வழங்கியது மட்டுமின்றி இந்த பாடலுக்கு விருது கிடைத்ததை பார்த்து ஆனந்தத்தில் கண்ணீர் விட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 95-வது அகாடமி விருது வழங்கும் விழாவில் எம்.எம். கீரவாணியின் பேச்சைக் கேட்டு தீபிகா படுகோனே பெருமிதம் கொண்டார். பார்வையார்களோடு ஒருவராக அமர்ந்துகொண்டு நடிகை தீபிகா ‘ஆர்ஆர்ஆர்’ குழு விருது வாங்குவதை கண்டு பெருமகழ்ச்சி அடைந்தார், இதோடு குழுவினர் ஆஸ்கார் விருது வாங்குவதை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார். சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டுப் பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது, ஆர்ஆர்ஆர் படத்தின் நாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டனர்.
Tears of joy in #DeepikaPadukone when #RRR song won #Oscars pic.twitter.com/SPlsW83dch
— Harmarmindarboxoff) March 13, 2023
இந்த வெற்றி அறிவிப்பை கேட்ட ஆர்ஆர்ஆர் இயக்குனர் ராஜமௌலியும் தனது இருக்கையில் இருந்து உற்சாகமாக துள்ளிகுதிக்கும் காட்சியும் பார்ப்பவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியிருந்தார் மற்றும் இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இசையமைத்து இருந்தார். டால்பி தியேட்டரில் நடைபெற்ற இந்த 95-வது அகாடமி விருது விழாவில் ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது, இதனை நடிகை தீபிகா படுகோனே தொகுத்து வழங்கினார்.