புதுச்சேரியில் சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டிற்கான ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் மாதத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், புதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு தேசிய வங்கியில் ரூ.50 ஆயிரம் வைப்பு தொகையாக செலுத்தப்படும் என்றும் பெண் குழந்தை பிறந்தால் வங்கியில் 18 ஆண்டுகளுக்கு ரூ.50 ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தப்படும் என முதலமைச்சர் விளக்கமளித்தார்.
பிளாஸ்டி பைகளுக்கு மாற்றாக துணிப்பைகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும் என்றும் 11, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி விரைவில் வழங்கப்படும் என்றும் மீனவர் உதவித்தொகை ரூ.3,000 லிருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளார்.