சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பாளராகவும், விநியோக நிறுவனத்தையும் நடத்தி வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சினிமா தொடர்பாக இனிமேல் யாரும் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவித்துள்ளார். திமுகவில் இளைஞர் அணி செயலாளராக இருந்த உதயநிதி, சினிமா தயாரிப்பு , விநியோகம் மட்டுமின்றி சில படங்களில் நாயகனாக நடித்து வந்தார். சிறிது சிறிதாக திரையுலக்குள் புகுந்த உதயநிதி தற்போது தமிழ்நாட்டின் திரையுலகை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். இதனால் சர்ச்சைகள் எழுந்த […]