95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. அதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்திருக்கிறது. எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர். ஆர். படத்தில் வந்த நாட்டு நாட்டு பாடலுக்கு முன்னதாக கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
ஆஸ்கர் விருது விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடி அசத்தினார்கள். அதை பார்த்து அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினார்கள்.
ஆஸ்கர் விருது விழா என்றாலே பெண்கள் பிரபல டிசைனர்கள் வடிவமைத்த கவுன் அணிவது வழக்கமாகிவிட்டது. ஆண்களோ கோட், சூட்டில் தான் பெரும்பாலும் வருவார்கள்.
இந்நிலையில் தான் ஆஸ்கர் விழாவில் இந்திய பாரம்பரியத்தை நிலைநாட்டியிருக்கிறது ஆர்.ஆர்.ஆர். படக்குழு. ராஜமவுலியோ வேஷ்டி, குர்தா அணிந்திருந்தார். ராம் சரணும், ஜூனியர் என்.டி.ஆரும். கருப்பு நிற ஷெர்வானியில் அம்சமாக இருந்தார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஆஸ்கர் விழாவில் ராம் சரணின் மனைவியான உபாசனாவும், ராஜமவுலியின் மனைவி ரமாவும் கலந்து கொண்டார்கள். உபாசனாவும், ரமாவும் பட்டுச் சேலையில் அழகாக வந்திருந்தார்கள்.
டிசைனர் கவுன் அணிவதற்கு பெயர் போன உபாசனாவோ ஆஸ்கர் விழாவில் சேலை தான் அணிய வேண்டும் என்று முடிவு செய்தது இந்திய ரசிகர்களை கவர்ந்துவிட்டது. ரமா ராஜமவுலி எப்பொழுதுமே சிம்பிளானவர். அதனால் அவர் சாதாரணமாக பட்டுச்சேலையில் வந்தது ஆச்சரியம் இல்லை.
ஆர்.ஆர். ஆர். படக்குழு முன்னதாக கோல்டன் குளோப் விருது விழாவிலும் இந்திய பாரம்பரிய உடையில் தான் கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் பிரபலங்களுக்கு மத்தியில் இந்திய பாரம்பரிய முறையில் உடை அணிந்து தனித்து தெரிந்தார்கள் ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினர்.
RRR, Jimmy Kimmel:ஆர்.ஆர்.ஆர். பாலிவுட் படமா?: ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளரை விளாசும் ரசிகர்கள்
அவர்களின் இந்த உடை தேர்வு தான் இந்திய ரசிகர்களை பெருமையாக பேச வைத்திருக்கிறது. இதற்கிடையே ஆர்.ஆர். ஆர். படத்தை பாலிவுட் படம் என்ற ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளரான ஜிம்மி கிம்மலை இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.ஆர். ஆர். ஒரு தென்னிந்திய படம். தெலுங்கு படம். அது ஒன்றும் பாலிவுட் படம் இல்லை. வெளிநாட்டவர்களுக்கு ஆர்.ஆர்.ஆர். பாலிவுட் படமாக தெரிகிறதோ என ரசிகர்கள் விளாசுகிறார்கள்.
SS Rajamouli, Oscars 2023: ஆஸ்கர் விருதுக்காக ரூ. 80 கோடி செலவு செய்தாரா ஆர்.ஆர்.ஆர். இயக்குநர் எஸ். ராஜமவுலி?
இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்காக ராஜமவுலி ரூ. 80 கோடி செலவு செய்திருப்பதாக இயக்குநர் தம்மாரெட்டி பரத்வாஜா கூறியிருக்கிறார். ராஜமவுலி ரூ. 80 கோடி செலவு செய்ததை நீங்கள் பார்த்தீர்களா, ஆதாரம் இருக்கிறதா என இயக்குநர் ராகவேந்திர ராவ் தம்மாரெட்டியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
The Elephant Whisperers: நம்ம முதுமலை தம்பதி பொம்மன், பெள்ளி, ரகு கதைக்கு தான் ஆஸ்கர் கிடைச்சிருக்குனு தெரியுமா?
இந்த ஆஸ்கர் விருது விழா இந்தியர்களுக்கு மிகவும் ஸ்பெஷலானது. நாட்டு நாட்டு தவிர்த்து The Elephant Whisperers படத்திற்கு சிறந்த ஆவண குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.