Oscars 2023: ஆஸ்கார் வென்ற நாட்டு நாட்டுப் பாடலைப் பாடியவர் யார் தெரியுமா?

Oscars 2023: கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற  நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கார் விருதை வென்றுள்ளது. அப்லாஸ் (டெல் இட் லைக் எ வுமன்), ஹோல்டு மை ஹேண்ட் (டாப் கன் மேவரிக்), லிஃப்ட் மீ அப் (பிளாக் பாந்தர் வகண்டா ஃபாரெவர்), மற்றும் திஸ் இஸ் எ லைஃப் (எவ்ரிதிங் எவ்ரிதிங் ஆல் அட் அட்) போன்ற பல பாடல்கள் போட்டியில் இருந்து வந்த நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கார் விருதினை வென்றிருக்கிறது.  95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.  இந்த ஆண்டு ஆஸ்கார் வழங்குபவர்களில் ஒருவராக நடிகை தீபிகா படுகோனேவும் பங்குபெற்றார்.  ‘நாட்டு நாட்டு‘ பாடலை ஆஸ்கார் விருது வழங்கும் விழா மேடையில் பார்வையாளர்களுக்கு நடிகை தீபிகா படுகோனே தொகுத்து வழங்கினார்.  

ஆர்ஆர்ஆர் படம் இரண்டு நிஜ வாழ்க்கை சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இடையிலான ரீல்-லைஃப் நட்பைப் பிரதிபலிக்கிறது என்று படத்தின் மையக்கருவை பற்றி நடிகை தீபிகா பார்வையாளர்களுக்கு கூறினார், இந்தப் பாடல் தெலுங்கில் ஒளிபரப்பப்பட்டது.  மனதை கவரும் வகையிலான பின்னணி குரல்கள், மின்சாரம் போன்ற பீட்ஸ், சிறப்பான நடன அசைவுகள் ஆகிய அனைத்தும் சேர்ந்து நாட்டு நாட்டு பாடலை ஆஸ்கார் விருதுக்கு தரம் உயர்த்தியுள்ளது.  நிஜ வாழ்க்கை இந்திய புரட்சியாளர்களான அல்லூரி சீதாராமராஜு மற்றும் கொமுரம் பீம் இடையேயான நட்பை கூறும் விதமாக ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படம் அமைந்திருக்கிறது.  இந்தியத் தயாரிப்பில் இருந்து ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் பாடல் இதுதான்.  பிரபல நடிகை தீபிகா படுகோனே விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலை பலவாறு பெருமைப்படுத்தி பேசினார்.  

 

பாடலின் பெருமையை பேசியதோடு மட்டுமல்லாமல் குழுவினர் விருது வங்கியில் ஆனந்த கண்ணீரும் விட்டார்.  இந்த பாடலுக்கு விழா மேடையில் நடிகர்-நடனக் கலைஞர் லாரன் கோட்லீப் மற்றும் அவரது குழுவினர் நடனமாடினர். இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் பார்வையாளர்களுடன் அமர்ந்து நடன கலைஞர்களை உற்சாகப்படுத்தினர்.  ஏற்கனவே ஆர்ஆர்ஆர் படம் கோல்டன் குளோப் விருதை வென்றிருந்த நிலையில் தற்போது படம் இரண்டாவதாக ஆஸ்கார் விருதினையும் வென்றுள்ளது.  

ஒவ்வொருவரும் ஆர்ஆர்ஆர் படக்குழுவை பாராட்டி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு ஆர்ஆர்ஆர் குழுவிற்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். “நாட்டு நாட்டு’ பாடலின் புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது, இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும்.  இந்த கௌரவத்திற்காக @mmkeeravaani, @boselyricist மற்றும் ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள். ஆஸ்கார் விருதைப் பெற்ற முதல் இந்தியப் பாடலாக “நாட்டு நாட்டு” அமைந்ததற்கு ஆர்ஆர்ஆர் குழுவை வாழ்த்துகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.