தமிழகத்தில் அரசு உத்தரவின் படி, இன்று பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்விற்காக அனைத்து மாணவர்களும் அதிக ஆர்வத்துடன் தயாராகி வந்துள்ளனர்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவருக்கு திடீரென கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த மாணவன் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே இருந்து பொதுத்தேர்விற்குத் தயாராகி வந்துள்ளார். அதன் படி, அந்த மாணவர் இன்று பொதுத்தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
இந்த தேர்வு எழுதுவதற்காக மாணவர், தனது தாயுடன் முகத்தை மூடியபடி கையில் வேப்பிலையுடன் வந்துள்ளார். அம்மை தொற்றையும் பொருட்படுத்தாமல் கையில் வேப்பிலையுடன் தேர்வு மையத்திற்கு வந்தது அனைவரையும் நெகிழ வைத்தது.