வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் ரஷ்ய பயணம் மேற்கொண்டு, அதிபர் புடினை சந்திக்க திட்டமிட்டு உள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன்- ரஷ்யா இடையே, கடந்த ஆண்டு பிப்.,24ல் போர் துவங்கியது. கடந்த ஒராண்டாக நடந்து வரும் இப்போரில் ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன் பல நாடுகளின் உதவியோடு எதிர்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
சில தினங்களுக்கு முன், சீன அதிபராக ஜி ஜின்பிங், 3வது முறையாக அந்நாட்டு பார்லிமென்டில் அதிபராக பதவியேற்றார். இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
இதன்படி, அடுத்த வாரம் அவர் ரஷ்யாவுக்கு சென்று அதிபர் புடினை நேரில் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அமைதி நடவடிக்கைக்கு உறுதுணையாக சீனா செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement