டெல்லி: ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை 4 மாதம் கிடப்பில் வைத்துவிட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ஆளுநரின் செயலை ஒன்றிய அரசு கண்டும் காணாதது போல் இருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.