மதுரை: கட்டிடம் முழுவதுமாக கட்டப்பட்டு, முறையான அனுமதி பெற்ற பின்னரே திறக்கப்பட்டது என ஐகோர்ட் கிளையில் மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் பதில் அளித்துள்ளது. மதுரை சூப்பர் சரவணா ஸ்டோர் கட்டுமான பணி, பாதுகாப்பு வசதி நிறைவடையும் வரை இடைக்கால தடை விதிக்கக் கோரிய வழக்கில் பதில் மனு அளித்துள்ளது. அவசர காலத்தில் பயன்படுத்தக் கூடிய அனைத்து விதமான ஏற்பாடுகளும் கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி முரளி சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.