7 ஆஸ்கர் விருதுகளை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? இது எந்த மாதிரியான படம்? போன்ற பல விஷயங்களை பார்க்கலாம்.
7 ஆஸ்கர் விருதுகள்
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர் ஆகிய 7 பிரிவுகளில் ‘Everything Everywhere All at Once’ திரைப்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை Everything Everywhere All At Once திரைப்படம் வென்றது. சிறந்த நடிகைக்கான விருது மிஷெல் யோவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலமாக ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆசிய பெண் இவர் என்ற என்ற சாதனையையும் படைத்துள்ளார். 2022 ஆம் ஆண்டு வெளியான Everything Everywhere All At Once திரைப்படம் நகைச்சுவை கலந்த science fiction திரைப்படம். இந்த படத்தை டேனியல் குவான் மற்றும் டேனியல் செய்னர்ட் இணைந்து இயக்கி உள்ளார்கள்.
நாயகி, நாயகனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் இருவரும் சீனாவை பூர்வீகமாக கொண்டவர்கள். ஆனால் அமெரிக்காவில் குடியேறி அங்கு லாண்டரி கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். நாயகிக்கு ஜாய் என்ற மகளும், தந்தையும் இருக்கிறார்கள். நாயகியின் வாழ்க்கையை பொருத்தவரை தொழிலில் முன்னேறாத கணவன், தாய் சொல்பேச்சை கேட்காத டீன் ஏஜ் மகள்,பழமைவாதம் பேசும் அப்பா, என அவளுக்கு எதிலும் நிம்மதி இல்லாத சூழலே உள்ளது. அந்த சூழ்நிலைகள் தான் நாயகிக்கு புதிய சிக்கலை உருவாக்குகிறது. அமெரிக்காவைப் பொருத்தவரை வரி செலுத்த வேண்டும் என்ற விஷயத்தில் மிகவும் கறாராக இருப்பார்கள். அங்கு IRS என்ற அமைப்பு தான் வரிவசூல் செய்வார்கள். அப்படி ஒரு நாள் நாயகியின் லாண்டரி கடைக்கு IRS அதிகாரி ஒருவர் வருகிறார். அவர்தான் கதையில் முக்கிய கதாபாத்திரமான டெய்ட்ரே.
டெய்ட்ரே கணக்குகளை எல்லாம் பார்த்துக் செய்து கொண்டிருக்கும் போது தான் multiverse என்ற கான்செப்ட்டை நோக்கி கதை நகர்கிறது. இதன் பின்னர் ஒவ்வொரு யுனிவர்சில் இருக்கும் தங்களைப் போன்ற கதாபாத்திரங்களை கதையில் வரும் ஒவ்வொருவரும் சந்திக்கிறார்கள். அதன் பின்னர் நாயகிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு பக்கம் IRS அதிகாரி டெய்ட்ரே, கணவன், மகள் மற்றும் அப்பா என பல வழிகளில் வெவ்வேறு யுனிவர்ஸ்களில் பிரச்சனைகள் வருகிறது. ஒரு கட்டத்தில் நாயகிக்கு தன்னுடைய மகள் ஜாய் கெட்ட சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டு உலகத்தையே கைப்பற்ற நினைக்கிறாள் என்று தெரிய வருகிறது. இதையெல்லாம் கடைசியாக நாயகி எப்படி சரி செய்தார். இறுதியாக அவருக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைத்ததா என்பது தான் இந்தப் படம்.
Everything Everywhere All at Once பற்றிய சுவாரசிய தகவல்கள்
இந்தப் படத்தின் லீட் ரோலில் நடிக்க ஜாக்கி சான் தான் முதலில் தேர்வு செய்யப்பட்டாராம். ஒரு கட்டத்தில் ஜாக்கி சானால் நடிக்க முடியாமல் போக படத்தின் இயக்குனர் கதையில் சில மாற்றங்களை கொண்டு வந்து அந்த லீட் ரோலை ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றிவிட்டாராம். அதற்காக அந்தப் படத்தில் ஹீரோயினாக எவிலின் வாங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மிஷெல் யோவு தேர்வு செய்யப்பட்டார். இந்தப் படத்தின் இயக்குனர்களான டேனியல் குவான் மற்றும் டேனியல் செய்னர்ட் கதையை உருவாக்கும் போது மார்வலின் மல்டிவர்ஸை நன்கு ஆராய்ந்த பிறகு இந்த படத்திற்கான கதையை எழுதி முடித்தார்களாம்.
இந்த படத்தில் ஒரு முக்கியமான IRS அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ஜேமி லீ கர்டிஸ் தனது கதாபாத்திரமான டெய்ட்ரே , படத்தில் நிஜமாக இருக்க வேண்டும் என்று விரும்பினாராம். அதற்காக ஆடை, மேக்கப் ,ஹேர் ஸ்டைல் உள்ளிட்ட பலவற்றுக்கும் மிகுந்த முக்கியத்துவமும் கொடுத்தாராம். இந்தப் படத்தில் vfx எனப்படும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மிகவும் தத்ரூபமாகவும் ரசிக்கும் வகையிலும் இருக்கும். ஆனால் இதன் பின்னணியில் இந்த துறையில் வல்லமை படைத்த நபர்கள் இதனை செய்யவில்லையாம் . மாறாக vfx இல் அதிக முன் அனுபவம் இல்லாத 5 பேரால் இது செய்து முடிக்கப்பட்டதாம்.
இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்த மிஷெல் யோவு நடிப்பு பிரமிக்க வைக்க கூடியது. ஏனென்றால் எமோஷன் காட்சிகளில் எமோஷன் ஆக நடிப்பது, சண்டைக் காட்சிகளில் எதிரிகளை புரட்டி எடுப்பது, தற்காப்புக் கலையில் எதிரிகளை துவம்சம் செய்வது என பல பரிணாமங்களில் தனது 200 சதவீதத்தை இந்த படத்திற்காக கொடுத்துள்ளார். இந்தப் படத்தின் எடிட்டரான பால் ரோஜரின் எடிட்டிங் திறன் அசாத்தியமானது. இயக்குனர் கொடுத்த நினைத்த கதைக்கு ஒரு துளி கூட தவறு என்று சொல்ல முடியாத அளவுக்கு தனது எடிட்டிங் திறமையை காட்டி உள்ளார். rapid cuts எனப்படும் எடிட்டிங் வகை இந்த படத்தில் அதிகமாக பார்க்க முடிந்தது. இந்தப் படத்தின் சுவாரசியம் குறையாமல் கடைசிவரை இருந்ததற்கு எடிட்டிங் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.