கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு உதவும் வகையில் கனடா அரசு வெளியிட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி…


 கனேடிய புலம்பெயர்தல் நடைமுறை டிஜிட்டல் மயமாகிவருகிறது. நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது முதல், விரைவில் குடியுரிமை உறுதிமொழி எடுத்தல் ஒன்லைன் மூலமாகவே செய்யப்படலாம் என சமீபத்தில் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு அறிவித்துள்ளது வரை எல்லாமே இணையம் வாயிலாக செய்யப்படும் நடைமுறைகளாக மாறிக்கொண்டே வருகின்றன.

கனடாவுக்கு புலம்பெயர உதவுவதாகக் கூறும் மோசடி இணையதளங்கள்

அதேநேரத்தில், இந்த நடைமுறைகள் குறித்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அவற்றைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக மோசடிகள் நடக்கவும் வாய்ப்புகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆகவே, மார்ச் மாதம் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பின் மோசடி தடுப்பு மாதம் என்பதால், புலம்பெயர உதவுவதாகக் கூறும் இணையதளங்கள் மோசடியானவை என்பதை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து கனடா அரசு ஆறு குறிப்புகளை வெளியிட்டுள்ளது.

கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு உதவும் வகையில் கனடா அரசு வெளியிட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி... | A Warning Message Issued By The Government

புலம்பெயர உதவுவதாகக் கூறும் இணையதளங்கள் மோசடியானவை என்பதை கண்டுபிடிப்பது எப்படி?


 1. நாம் கேட்காமலேயே புலம்பெயர்தல் குறித்து விளம்பரம் செய்யும் இணையதளம்

ஒருவர் புலம்பெயர்தல் குறித்து எதுவும் விசாரிக்காமல் இருக்கும் நிலையில், புலம்பெயர்தல் தொடர்பாக முன்பின் தெரியாத நபர் ஒருவர் ஒரு மின்னஞ்சல் மூலமாக ஒரு இணையதளம் குறித்து உங்களுக்கு லிங்க் ஒன்றை அனுப்புவாரானால், அது மோசடியாக இருக்கலாம்.

2. அந்த இணையதளம் கனேடிய அரசின் இணையதளமாக தோன்றவில்லை என்றால் அது மோசடியாக இருக்கலாம்

கனேடிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை இரண்டு முக்கிய விடயங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அந்த இணையதளத்தில் விவரங்கள் கனடாவின் அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் கொடுக்கப்பட்டிருக்கும்.

அவை, Canada.ca URL அல்லது ‘gc.ca’ என முடியும் URLஐக் கொண்டிருக்கும்.
இவை இல்லாத இணையதளங்களை நம்பவேண்டாம். 

3.இந்த இணையதளங்கள் புலம்பெயர்தல் உறுதி என்பதுபோன்ற வாக்குறுதிகளை அளிக்கும்

எந்த புலம்பெயர்தல் பிரதிநிதியும், எக்காரணம் கொண்டும், கனேடிய புலம்பெயர்தலுக்கு உறுதியளிக்க முடியாது. ஆகவே, புலம்பெயர்வது உறுதி, வேலை நிச்சயம், நல்ல சம்பளம் என்பது போன்ற எந்த வாக்குறுதிகளையும் நம்பவேண்டாம்.

4. படிவங்களுக்கு கட்டணம் கேட்கும் இணையதளங்கள்

கனேடிய புலம்பெயர்தல் விண்ணப்பங்களை பரிசீலிக்கமட்டுமே கட்டணம் உண்டு என்பதை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. படிவங்கள் (Forms, guides and other supplementary materials) போன்ற விடயங்களை இலவசமாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பின் இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

5. தனிநபர் மற்றும் நிதி தொடர்பான விவரங்கள், டெபாசிட் செய்யக்கோரும் இணையதளங்கள்

மேற்குறிப்பிட்டதுபோலவே, கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பின் இணையதளம், வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள், Social Insurance Number (SIN) ஆகியவற்றைக் கேட்காது. அத்துடன், கனேடிய புலம்பெயர்தல் திட்டம் எதற்கும் பணம் டெபாசிட் செய்யவும் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் புலம்பெயர்தல் அமைப்பு கேட்காது.

6. பிரதிநிதியைக் குறித்த முக்கிய விவரங்கள் மற்றும் தகவல் தொடர்பு முகவரி ஆகியவை இருக்காது

புலம்பெயர்தல் பிரதிநிதியாக தன்னை அறிமுகம் செய்யும் நபரின் பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டு, அவரைக் குறித்த முக்கிய விவரங்கள் மற்றும் தகவல் தொடர்பு முகவரி ஆகியவை கொடுக்கப்படவில்லையென்றால் அது நம்பிக்கைக்குரிய இணையதளம் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இப்படிப்பட்ட இணையதள மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி?

இப்படிப்பட்ட இணையதள மோசடிகளைத் தவிர்க்க, ஒரு அங்கீகாரம் பெற்ற கனேடிய புலம்பெயர்தல் சட்டத்தரணியை அணுகுவது நல்லது.  

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.