திருப்பதி: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில், மார்ச் 21, 22ஆம் தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இலவச தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசனங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு விஐபி தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. இந்த ஆண்டு […]