அரசு நிறுவனங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்த வழக்கில் முன்னால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பெயில் இல்லாத கைது வாரண்ட்டை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இன்ரான்கானின் கட்சி தெஹ்ரீக்-இ-இன்சாப் அவரின் கைது நடவடிக்கைக்கு எதிராக மனுத்தாக்கல் செய்ததில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிலிகான் வேலி வங்கி திவாலானதையடுத்து, கலிபோர்னியா ஆளுநரான கேவின் நியூசாம் (Gavin Newsom) -யிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொடர்பு கொண்டு பேசினார். இந்த சூழ்நிலையைக் கையாள்வதைப் பற்றி பேச்சுவார்த்தைகள் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் மத்திய வங்கியின் ஆளுநராக முன்னதாக பதவியிலிருந்த இ-கேங்க் (Yi Gang) மீண்டும் அந்தப் பதவிக்காகத் தேர்வு செய்யப்பட்டார். 65 வயதான இ-கேங்க் (Yi Gang), இந்த பதவிக்காகத் தேர்வு செய்யப்பட்டது நாடாளுமன்ற கூட்டம் ஒன்றில் அறிவிக்கப்பட்டது.
பிபிசி-ன் முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளரான Gary Lineker (கேரி லினேக்கர்), ரிஷி சுனக் அரசின் புதிய குடியேற்றச் சட்ட முயற்சிகளுக்கு எதிராக நிகழ்ச்சியில் கருத்துக்கள் வெளியிட்டதால் பிபிசியிலிருந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இரானில் மாணவிகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில், 100-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.
மார்ச் 1-ம் தேதி வானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது நிலை தாடுமாறிய தருணத்தில் பயணிகள் எடுத்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அந்த லுஃப்தான்சா (Lufthansa) விமான நிறுவனம் நீக்குமாறு கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
சவுதி அரேபியா, அந்த நாட்டில் புதிய தேசிய விமான மையத்தை உருவாக்கப் போவதாக அறிவித்தது. 2030-யில் 100-க்கும் மேற்பட்ட உலகளாவிய இடங்களுக்கு விமானங்கள் “ரியாத் ஏர்” மூலம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மொசாம்பிக் ‘ஃபிரெடி’ சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த நான்கு வாரங்களில், மட்டும் ஒரு வருடத்தில் பேய வேண்டிய மழை பொழிந்ததாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் கலிபோர்னியாவுக்குச் சென்று, ஆஸ்திரேலிய, அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து புதிய ராணுவ கொள்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தவிருக்கிறார். இது AUKUS நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
2023 -க்கான ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட RRR படத்தின் ‘நாட்டு நாட்டு ‘ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இந்திய ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.