எல்லா படங்களும் பான் இந்தியா படங்களாவதில்லை : நானி

தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் நானி. வெப்பம் என்கிற நேரடி தமிழ் படத்தில் நடித்தார், நான் ஈ, ஷியாமா சிங்கராய் உள்ளிட்ட மொழிமாற்று படங்களின் மூலம் இங்கும் பிரபலமானார். தற்போது அவர் தெலுங்கு, தமிழில் உருவாகும் 'தசரா' என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சமுத்திரகனி, சாய்குமார் உள்ளபட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் ஒதெல்லா இயக்கி உள்ளார். வருகிற 30ம் தேதி வெளிவருகிறது.

இந்த படத்தின் புரமோசனுக்காக சென்னை வந்த நானி நிருபர்களிடம் கூறியதாவது: எனது சில படங்கள் பான் இந்தியா படமாக மாறி இருக்கிறது. என்றாலும் முறைப்படியான பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது தசரா. எல்லா படங்களும் பான் இந்தியா படங்களாவதில்லை. எல்லா மொழிகளிலும் வெளியாவதாலும் அது பான் இந்தியா படமாகாது. இந்தியாவுக்கு பொருத்ததமான கண்டன்ட் அந்த படத்தில் இருக்க வேண்டும்.

இந்த படத்தில் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசி இருக்கிறோம். 1980களில் நடந்த கதை. அந்த காலகட்டத்தை உருவாக்கி இந்த படத்தை எடுத்துள்ளோம். மிக கடினமான உழைப்பின் மூலம் அது சாத்தியமானது. இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேசுக்கு மீண்டும் தேசிய விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஓடிடி தளங்கள் தவிர்க்க முடியாதது. மற்றும் வரவேற்க கூடியது. என்றாலும் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் கமர்ஷியல் படங்கள் தியேட்டர் அனுபவத்திற்காகவே தயாரிக்கப்படுகிறது. அவைகள் கண்டிப்பாக தியேட்டரில்தான் வெளியாக வேண்டும். அதிக அளவில் 2ம் பாகங்கள் உருவாவது கற்பனை வறட்சியால் அல்ல. நமக்கு பிடித்தமான படங்களை புதிய வடிவில் பார்க்கும் முயற்சிகள்தான். நான் ஈ படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.