சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி!


அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு HSBC வங்கி வாங்கியுள்ளது.

வெறும் 1 பவுண்டுக்கு கைப்பற்றியது

திவாலாகி பெரும் நெருக்கடியில் சிக்கிய அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய துணை நிறுவனத்தை (Silicon Valley Bank UK Limited) வெறும் 1 பவுண்டுக்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.399) வாங்குவதாகக் கூறியுள்ளது.

சிலிக்கான் வேலி வங்கி, பிரித்தானியாவில் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நிதி நிறுவனமாக இயங்கி வருகிறது.

இரண்டே நாட்களில் திவாலானது

அமெரிக்காவின் 16-வது மிகப்பெரிய வங்கியாக இருந்த சிலிக்கான் வேலி வங்கி, கடந்த வாரம் வெறும் இரண்டே நாட்களில் திவாலானது. இது, சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி! | Uk Hsbc Acquires Silicon Valley Bank For 1 PoundEPA

போதிய நிதி இல்லாததால் சிலிக்கான் வேலி வங்கி தன்னிடம் இருந்த பத்திரங்களை நஷ்டத்தில் விற்பனை செய்தது. இதைத்தொடர்ந்து இந்த வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் அனைவரும் வேகவேகமாக தங்கள் பணத்தை வெளியே எடுத்துக்கொண்டனர்.

அதுமட்டுமின்றி, முதலீட்டாளர்களும் சிலிக்கான் வேலி வங்கியிலிருந்து வெளியேறியதால் அதன் பங்கு விலை 60 சதவீதம் சரிந்தது. இதைத்தொடர்ந்து சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி படுத்தேவிட்டது. இதனால் சிலிக்கான் வேலி வங்கியை அமெரிக்க அரசு மூடியது.

இதையடுத்து டெபாசிட்டர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தப்படும் என அமெரிக்க அரசு உறுதியளித்த நிலையில், சிலிக்கான் வேலி வங்கியை வாங்குவதற்கும் யாரும் இதுவரை முன்வரவில்லை. இதனால், சிலிக்கான் வேலி வங்கியின் சொத்துகள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

HSBC வாங்கியது

இந்நிலையில், சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய பிரிவை வெறும் 1 பவுண்டுக்கு எச்எஸ்பிசி வங்கி (HSBC Bank) வாங்கியுள்ளது.

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய கிளையை வெறும் 1 பவுண்டுக்கு வாங்கிய HSBC வங்கி! | Uk Hsbc Acquires Silicon Valley Bank For 1 PoundThe National

சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய பிரிவிடம் 6.7 பில்லியன் பவுண்ட் மதிப்புள்ள டெபாசிட்டுகள் இருக்கின்றன. மேலும் 5.5 பில்லியன் பவுண்ட் கடன்களை வழங்கியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கியின் பிரித்தானிய பிரிவு உடனடியாக எச்எஸ்பிசி வங்கியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

எச்எஸ்பிசி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நோயல் க்வின் (Noel Quinn), “இந்த கையகப்படுத்தல் பிரித்தானியாவில் எங்கள் வணிகத்திற்கு சிறந்த மூலோபாய அர்த்தத்தை அளிக்கிறது.., நாங்கள் SVB UK-ன் வாடிக்கையாளர்களை HSBC-க்கு வரவேற்கிறோம் மற்றும் UK மற்றும் உலகம் முழுவதும் அவர்கள் வளர உதவ எதிர்நோக்குகிறோம்.., SVB UK சகாக்களை HSBC-க்கு அன்புடன் வரவேற்கிறோம், அவர்களுடன் இணைந்து பணியாற்றத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறியுள்ளார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.