திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 22ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்ய உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அந்த அறிவிப்பில், “சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வரும் 21ம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக, அரசு தலைமை கொறடா கோவி செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.