காலையும் மாலையும் விளக்கு ஏற்றுவது நமது வீட்டில் முக்கியமான சம்பிராதாயங்களுள் ஒன்றாகியுள்ளது.
தீபத்தில் மூன்று தேவிகளான துர்கை, சரஸ்வதி, லட்சமி மூன்று சக்தியும் தீபத்தில் இருப்பதால் ஒளிமயமான முன்னேற்றம் வீட்டில் கிடைக்கின்றது.
தீபம் ஏற்றி தினமும் பூஜை செய்வதால் மனதில் தோன்றும் குழப்பங்களைப் போக்க முடியும்.
இது உள்ளத்தின் இருளை போக்குகிறது. வாழ்வில் உயரத்தை கொடுக்கின்றது.
மனதில் ஏற்படும் கவலை, துன்பங்கள், தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.
இதனால் தான் தினமும் பெண்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறு தினமும் விளக்கு ஏற்றினாலும் நம்மிள் சிலர் பல தவறுகளை செய்வார்கள்.. ஆகவே நாம் செய்ய கூடாத தவறுகள் என்னெவென்று பார்க்கலாம்.
செய்யக் கூடாதவைகள்,
- சூரியன் வரும் முன்னவே விளக்கு ஏற்ற வேண்டும்.
- மாலையில் சூரியன் மறையும் முன்னதாகவே விளக்கு ஏற்றிட வேண்டும்.
- இரு திரி போட்டு விளக்கு வைப்பது சிறந்தது.
- விளக்கை கிழக்கு, மேற்கு மற்றும் வடக்கு திசை நோக்கியும் ஏற்ற வேண்டும்.
- தெற்கு நோக்கி ஏற்றக் கூடாது.
- புதிய மஞ்சள் துணி போட்டு விளக்கு ஏற்றுவது சிறந்தது.
- வாழைத்தண்டில் திரி போட்டு ஏற்றினால் நல்லது.
- ஆமணக்கு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினால் செல்வம் பெருகும்.
- தேங்காய் எண்ணெய் மற்றும் விளுப்பெண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் ஆரோக்கியம் பெருகும்.
- நெய் தீபம் ஏற்றினால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
- விளக்கேற்றியவுடன் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்.
- வீட்டில் அகழ் விளக்கேற்றி விளக்கேற்றினால் வீட்டில் சக்தி அதிகரிக்கும்.
-
தீபத்தை வாயால் ஊதி அனைக்ககூடாது. பூ வைத்து அனைக்க வேண்டும்.