திரைத்துறையை பொறுத்தவரை உலகிலேயே மிகவும் உயரிய விருது என்றால் அது ஆஸ்கார் விருது தான். கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் இசைப்புயல் ரஹ்மான் இரண்டு விருதுகளை வாங்கி தமிழர்கள் அனைவரையும் பெருமை படுத்தினார்.
உலகளவில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் எல்லா புகழும் இறைவனுக்கே என தமிழில் பேசி அசத்தினார் ரஹ்மான். அதன் பின் தற்போது இசையமைப்பாளர் கீரவாணி RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருதை பெற்றுள்ளார்.
AK62: அந்த வலி இருக்கே..மறைமுகமாக அஜித்தை தாக்கி பேசிய விக்கி..!
இந்திய படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ஆஸ்கார் விருதை வாங்குவது இதுவே முதல் முறையாகும். பல மொழி பாடல்களுக்கு மத்தியில் நாட்டு நாட்டு பாடல் வெற்றிபெற்றதை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். விருதை வாங்கிய கீரவாணி இந்த விருதை நம் இந்திய ரசிகர்கள் அனைவர்க்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மேலும் இந்த விருதுக்கு காரணமான அனைவர்க்கும் பாட்டின் மூலம் நன்றியை தெரிவித்தார் கீரவாணி. இந்த சாதனையை நிகழ்த்திய கீரவாணிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி ஆஸ்கார் விருதில் நடக்கும் அரசியல் பற்றி பேசியுள்ளார்.
அதாவது ஒரு திரைப்படம் அயல்நாட்டை சார்ந்தவர்களை ஹீரோ ஜெயிப்பது போன்ற கதையம்சம் கொண்டிருந்தால் அந்த படத்தை அவர்கள் ஆதரிக்கமாட்டார்களாம். மேலும் அப்படத்திற்கு விருதுகளும் கிடைக்காதாம். இதே போல தான் அமீர்கான் நடிப்பில் வெளியான லகான் படத்திற்கும் நடந்துள்ளது என சுட்டிக்காட்டி பேசினார் பிஸ்மி.
அப்படத்தில் நாயகன் ஆங்கிலேயர்களை ஜெயிப்பது போன்ற கதையம்சம் கொண்டதால் தான் லகான் படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டும் எந்த விருதும் கிடைக்கவில்லை என கூறியுள்ளார் பிஸ்மி. இதைக்கேள்வி பட்ட ரசிகர்கள் அனைவரும் ஆஸ்கார் இதுபோன்ற பாரபட்சத்தை பார்ப்பது தவறான ஒன்று என தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.