வடகிழக்குக் கிழக்கில் வெற்றி வாகை சூடிய பாஜக, அதேபோல் கேரளாவை வெல்வதற்கான முனைப்பில் இறங்கியுள்ளது. இரண்டு முக்கிய இந்து அல்லாத சமூகங்களான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அரவணைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவில் மக்கள்தொகையில் 46 சதவீதத்தை உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், அம்மாநிலத்தின் வெற்றிக்கு முக்கிய வாக்கு வங்கியாக உள்ளனர். இவர்களின் வாக்கு வங்கியை காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அறுவடை செய்து வருகிறது. பாரம்பரியமாகவே இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் கோட்டையாக இருக்கும் ஒரு மாநிலத்தை கைப்பற்றுவதற்கு பாஜக இப்போதே களத்தில் இறங்கியுள்ளது.
2019 தேர்தலுக்கு முன்னதாக கேரளாவில் தனது அட்டகாசத்தை முடுக்கிவிட்ட பாஜகவால் அங்கு காலூன்ற முடியவில்லை. சபரிமலை விவகாரத்தில் உச்சகட்ட போராட்டங்கள் நடந்த போதிலும், தேசிய போக்குக்கு எதிராக, அக்கட்சி மாநிலத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. மாநிலத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகள் மேலும் நான்கை வென்றன.
வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே பல வகுப்புவாத மோதல்கள் நடந்தாலும், மாநிலத்தில் பாஜகவின் வளர்ச்சி என்பது தடைபட்டே வந்துள்ளது. அதன்காரணமாக இந்த முறை திட்டமிடப்பட்ட மிகப்பெரிய அவுட்ரீச் திட்டத்தை பாஜக பிளான் செய்துள்ளது.
அதன்படி ஈஸ்டர் வாரத்தில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு பாஜக தொண்டர்கள் வருகை தருவார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. ஏப்ரல் 9, ஈஸ்டர் ஞாயிறு அன்று, 10 ஆயிரம் பாஜகவினர் 1 லட்சம் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் செல்ல உள்ளனர்.
கடந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் வாரத்தில், ஆயிரக்கணக்கான பாஜகவினர் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு பரிசுகளுடன் வருகை தந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.அ தேபோல் வலதுசாரி இந்துத்துவவாதிகள் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் ஈத் அன்று முஸ்லிம்களின் வீடுகளுக்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 15 ஆம் தேதி விஷு பண்டிகையின் போது பாஜகவினரின் வீடுகளுக்கு கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட உள்ளனர். பொது மக்கள் இந்த முயற்சியை வரவேற்றுள்ள நிலையில், ஆளும் இடதுசாரிகளும் எதிர்க்கட்சியான காங்கிரசும் இதை உன்னிப்பாக கவனித்து வருவதாக பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தின் போது, கேரளாவில் உள்ள சிறுபான்மையினருக்கு “சிநேக சம்வாத்” (பாசத்தின் செய்தி) ஏற்பாடு செய்யுமாறு கட்சியினரைக் கேட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் யோசனையே இந்த அவுட்ரீச் ஆகும்.
மூன்று வடகிழக்கு மாநிலங்களில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி, 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள கேரளாவில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
இம்முறை, வடகிழக்கில் அதற்கு அதிக ஆதரவை வழங்கிய கிறிஸ்தவ சமூகத்தின் ஆதரவை கட்சி பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார். கேரளாவில் இரண்டு ஆதிக்கக் கட்சிகளைச் சுட்டிக்காட்டி, மாநிலத்தில் இடதுசாரிகளும் காங்கிரஸும் கடும் போட்டியாளர்களாக இருக்கும்போது, திரிபுரா தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாகப் போட்டியிட்டதாக அவர் கூறினார்.
டபுள் எஞ்சின் அரசு; கொட்டும் வருவாய்… மாண்டியாவில் பிரதமர் மோடி பெருமிதம்!
மாநிலத்தின் பல்வேறு மத்திய திட்டங்களின் பயனாளிகளின் சாட்சியங்களை உள்ளடக்கிய “நன்றி மோடி” திட்டத்தையும் பாஜக திட்டமிட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மலையாளத்தில் ஏற்கனவே 12 ஆயிரம் பேர் “நன்றி மோடி” வீடியோக்களை அனுப்பியுள்ளது குறிப்பிடதக்கது.