சென்னை: வரும் மார்ச் 21ல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21.03.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
22-ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வரும் 22.03.2023 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.