சினிமா பத்தி என்கிட்ட பேசாதீங்க…. – உதறிய உதயநிதி
சென்னை : ரெட் ஜெயன்ட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். சினிமா தொடர்பாக இனி யாரும் என்னிடம் பேசாதீர்கள் என நடிகரும், அமைச்சருமான உதயநிதி தெரிவித்துள்ளார்.
மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள படம் 'கண்ணை நம்பாதே'. நாயகியாக ஆத்மிகா நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா, பூமிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மார்ச் 17ல் படம் ரிலீஸாகிறது.
இப்படம் தொடர்பாக உதயநிதி கூறுகையில், ‛‛கிரைம் கலந்த திரில்லர் படத்தில் நடிக்க ஆசை. அப்படி அமைந்த படம் தான் இது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட படம். கொரோனாவால் தாமதமாகிவிட்டது. பெரும்பாலும் படம் இரவில் தான் நடக்கிறது. இளைஞரணி செயலாளர், எம்எல்ஏ பிறகு தான் அமைச்சரானேன். நான் ஒரே பாடலில் உயரவில்லை. நான்கரை ஆண்டுகள் உழைத்து தான் அமைச்சரானேன். ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். தற்போது அதனை அர்ஜுன் துரை மற்றும் செண்பகமூர்த்தி ஆகியோர் தான் பார்த்துக் கொள்கிறார்கள். இனி சினிமா தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளாதீர்கள்.
இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.