Lokesh Kanagaraj: இதுவரை ஒரு ஃப்ளாப் கூட கொடுக்காத லோகேஷ் கனகராஜ்: லியோ ஏற்கனவே ரூ. 400 கோடி வசூல்

Leo, Lokesh Kanagaraj: இன்று பிறந்தநாள் கொண்டாடும் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

​லோகேஷ் கனகராஜ்​வங்கி ஊழியரான லோகேஷ் கனகராஜுக்கு சினிமா மீது தீராக்காதல். இதையடுத்தே வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார். கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் லோகி. படம் பார்த்த அனைவரும் யார் இந்த இயக்குநர் என வியந்து பேசினார்கள். இதையடுத்தே கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.
​கைதி​கைதி படப்பிடிப்பு இரவு நேரத்தில் தான் நடந்தது. யார் இந்த ஆளு, ராத்திரியாச்சுனா ஷூட்டிங் நடத்துகிறார். இந்த படம் எல்லாம் ஓடாது என்றார்கள். ஆனால் கைதி படம் சூப்பர் ஹிட்டானது. காமெடி இல்லை, ரொமான்ஸ் இல்லை, ஐட்டம் பாடல் இல்லை ஆனாலும் படம் பக்காவாக இருந்தது. பலருக்கும் பிடித்த படமாக அமைந்தது கைதி. டைரக்டர் பையன் வித்தியாசமானவரா இருக்காரே என பெயர் வாங்கினார்.
​மாஸ்டர்​இரண்டே இரண்டு படம் இயக்கி கோலிவுட்டின் மொத்த கவனத்தையும் ஈர்த்தார் லோகேஷ் கனகராஜ். இதையடுத்தே இந்த பையன் ஏதோ நல்லா பண்றான் என லோகேஷ் கனகராஜுக்கு டேட்ஸ் கொடுத்தார் விஜய். அவரை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி வெளியிட்டார் லோகேஷ். முந்தைய இரண்டு படங்களை போன்று மாஸ்டர் படமும் வெற்றி பெற்றது.
​விக்ரம்​Leo Vijay: ரோலக்ஸுக்கு லியோ என்ன உறவு?: FLAMES போட்டு பார்த்த ரசிகர்கள், நினைச்ச மாதிரியே…பாருய்யா மூன்றாவது படத்திலேயே தளபதி விஜய்யை இயக்கிவிட்டார் என பலரும் வியந்தபோது உலக நாயகன் கமல் ஹாசன் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. கமலை வைத்து விக்ரம் படத்தை ரிலீஸ் செய்தார். அந்த படம் ரூ. 500 கோடி வசூல் செய்தது. கமலின் கெரியரிலேயே மிகப் பெரிய வெற்றி படம் விக்ரம் தான். மேலும் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் சாராக வந்த சூர்யாவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

​எல்.சி.யூ.​கைதி படம் மூலம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கினார் லோகேஷ் கனகராஜ். அத்தகைய யூனிவர்ஸை தமிழ் இயக்குநர்கள் யாரும் இதுவரை உருவாக்கவில்லை. இந்நிலையில் தான் டேய், தம்பி வாடா, நாம சேர்ந்து மீண்டும் படம் பண்ணலாம் என்று லோகேஷிடம் கூறினார் விஜய். இதையடுத்து தளபதியை வைத்து லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

​லியோ​லோகேஷ் கனகராஜ் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்து வருகிறது. படக்குழுவுடன் சேர்ந்து தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் லோகேஷ். லியோ படத்தின் கதை லோகேஷின் எல்.சி.யூ. தான். அந்த படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்து வருகிறார் த்ரிஷா. லியோ படம் ரிலீஸாவதற்கு முன்பே சாட்டிலைட், டிஜிட்டல் உள்ளிட்ட உரிமங்கள் மூலம் ரூ. 400 கோடி வசூல் செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

​Leo Vijay: ரிலீஸுக்கு முன்பே ரூ. 400 கோடி வசூலித்த லியோ: விஜய் படம் புது சாதனை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.