இந்த படம் ஆஸ்கர் வாங்க என்ன காரணம்? – இல்லத்தரசி பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

இந்த வருட‌ ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, களைகட்டியது..‌ நம் நாட்டிற்கும் இரண்டு விருதுகள்.‌‌ ஒன்று‌ இசைக்கு, இன்னொன்று‌‌ ஆவணப்படத்திற்கு..‌‌

பொதுவாகவே ஆஸ்கர்‌ விருது என்றால் , நன்றாக நடிப்பவர்களுக்கு என்று தான்‌ முதலில் நினைப்போம். நம் முன்‌ இருப்பவர்கள் பேசும்‌போது, அது நடிப்பு எனத் தெரிந்தால்.. யார் யாருக்கோ ஆஸ்கர் கிடைக்குது.. உனக்குதான்‌ முதல்ல குடுக்கனும் என‌ நாம் விளையாட்டாக சொல்வது உண்டு..

ஆனால் ஆவணப்படங்கள் என்றால் நிஜவாழ்க்கையை எடுத்துக்காட்டுவது.‌ நடிப்பிற்கு அங்கு இடமில்லை.

அந்த வகையில் விருது பெற்ற The elephant whisperers ஆவணப்படத்தை… விருது வாங்கியிருக்கிறதே இந்தப் படம்..‌பார்த்தே தீரவேண்டும் என‌‌ப் பார்த்தேன்.‌

The elephant whisperers directors

நாற்பதே நிமிடங்கள் தான் நகர்கிறது இந்த ஆவணப்படம் . அந்த நாற்பது நிமிடங்களும் நாமும் காட்டுக்குள் வாழ்ந்த ஒரு‌ உணர்வு.‌‌

முதுமலை வனப்பகுதியின் அழகிய காலை, மாலை, இரவு என‌ மூன்று வேளைகளிலும் காண்பித்த விதம் அவ்வளவு அற்புதம்..

தாயை இழந்த குட்டி யானைகளை(ரகு, அம்மு) வளர்க்கும் பணி கிடைக்கிறது பொம்மன்‌ , பெல்லி தம்பதியர்க்கு. அவற்றை அவர்கள் எவ்வளவு பாசத்துடன் மிகுந்த சிரமங்களுக்கிடையே வளர்க்கிறார்கள் என்பதை இந்த ஆவணப்படம் நமக்கு விளக்குகிறது.

The elephant whisperers

யானையை இவர்கள் பராமரிக்கும் விதம் அருமை. குட்டி யானைகளும் இவர்களுடன் ஒட்டிக்கொள்வது, சொல்பேச்சைக் கேட்பது,‌மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இருக்கும் பந்தம் இவற்றை காட்சி படுத்திய விதம் அதுவும் எந்த அதிகப்படியான காட்சிகள் இன்றி தெளிவாக புரிய‌வைத்தது,,.. ஆகியவற்றை ஒற்றை வரியில் கூற‌ வேண்டுமானால் *வாவ்* என்று தான்‌ சொல்ல வேண்டும்.

முக்கியமாக காட்டுடன்‌‌ இணைந்து வாழும் மனிதர்கள் .‌ அவர்களின் நம்பிக்கைகள், இயற்கையை மதிக்கும் அவர்களின் குணாதிசயங்கள்,.. இன்றைய நாகரீக உலகம் கற்றுக் கொள்ளவேண்டிய‌ ஒன்று.

elephants

காட்டில் வாழும் பறவைகள், வனவிலங்குகள், முக்கியமாக மனிதர்களோடு சேர்ந்தே வாழும் குரங்குகள், காட்டுப் பன்றிகள் ஆகியவற்றை காண்பித்ததில் இயக்குநர் தன் திறமையை வேறு‌ இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

அதுவும் முக்கியமாக மலைப் பாறைகளின் இடுக்கில், உயிரை துச்சமாக எண்ணி, தேன் கூட்டில் இருந்து தேன் எடுக்கும் காட்சியை பதிவு செய்ததற்கு எக்கச்சக்க அப்ளாஸை வாரி வழங்கலாம்.

The Elephant Whisperers

யானைக்கு டியூபில் பால் ஊட்டுவது, களியை பிசைந்து உருண்டைகளாக வாயில் வைப்பது, தேங்காயைப் பார்த்தவுடன் , யானைக் குட்டி, களி திங்காமல், தேங்காய்க்கு ஆசைப்படுவது, நல்ல நாட்களில் யானைகளுக்கு அலங்காரம் செய்து கோவிலுக்கு அழைத்துச் செல்வது, அவைகளும் அங்கு விநாயகரைப் பார்த்து வணங்குவது ஆகிய காட்சிகள் ரசிக்கவைக்கின்றன….

முதலில் ரகுவை வளர்ப்பது பிறகு அம்மு வந்து சேர்வது , அம்முவின் வருகையை முதலில் ஏற்காத ரகு, பின் நட்புடன்‌ பழகுவது.. இன்னொரு பெரிய யானை கிருஷ்ணாவுடனான நட்பு, ஆகிய காட்சிகள் யானைகள் உலகத்தை நமக்குப் புரிய வைக்கின்றன.

ரகுவும், அம்முவும் அந்தத் தம்பதியரின் நிஜக்குழந்தைகள் போலவே உணர்கின்றன. யானையை அவர்கள்‌ மட்டும் அல்லாமல், அந்தப் பகுதியில் வாழும் சிறுவர்களும் குளிப்பாட்டுவது , அதனுடன் ஆனந்தமாக விளையாடுவது எனப் பார்க்கையில் ..அடுத்த ஒரு தலைமுறையும் யானைகள் பராமரிப்பிற்குத் தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருக்கின்றன‌என்பதை ஊர்ஜிதம் செய்கின்றது..

யானை

மலைகள், காடுகள், தெளிந்த நீர்நிலைகள், மேகங்கள்,, வனவிலங்குகள்,. காட்டின்‌ அமைதி, அதன் தூய்மை.. இவையாவும் ஒளிப்பதிவு செய்து நம்‌ கண்களுக்கு விருந்தாக்கியிருக்கிறார்கள்..‌‌

தாயைப் பிரிந்தக் குட்டியானை ரகுவை நன்றாக வளர்த்தபின், அரசாங்க ஆணைப்படி அதை வளர்த்த அந்தத் தம்பதியர் அதை பிரியும் தருணத்தில் அவர்களைப் போலவே நமக்கும் அழுகை வருவதுதான் இத்திரைப்படம் விருது வாங்கியதற்கான‌ காரணம் என‌ நான்‌ நினைத்தேன்..

ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியல்

ரகுவை பிரிந்த அம்முவும் சில நாட்கள் எதுவும் சாப்பிடாமல் தன்‌ சோகத்தைக் காட்டியது… இன்னமும் இந்த உலகம் சுழல்வதற்கு,. பாசம் என்ற ஒன்றே காரணம் எனபது தெளிவாகிறது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.