மதுரை: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வீடியோ வெளியிட்ட உ.பி. மாநில பாஜக நிர்வாகியான வழக்கறிஞர் பிரசாந்த் உம்ராவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழகஅரசும், டிஜிபியும் வடமாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை என்று கூறியதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தனர். மேலும் வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து, பல வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இந்த […]