தமிழ்நாட்டில் பிகாரை சேர்ந்த தொழிலாளர்கள் இந்தி மொழியைப் பேசுவதற்காகத் தாக்கப்படுவதாக கடந்த வார மத்தியில் இருந்து வதந்திகள் பரப்பப்பட்டன. சமூக வலைதளங்களில் மட்டுமல்லாமல் பிரபல நாளிதழ்களே இது தொடர்பான உண்மைத் தகவல்களை சரிபார்க்காமல் அதை செய்தியாக வெளியிட்டன.இது, தமிழ்நாடு – பிகார் ஆகிய இரு மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டில் பணியாற்றிவரும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் பரவவிடப்பட்ட இந்த வீடியோக்களின் காரணமாக இங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் பரவியது. பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்ப விரும்பினர்.
இந்நிலையில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் போலியான வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.இன்று இந்த வழக்கின் விசாரணையில் பாஜக பிரமுகருக்கு முன் ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வீடியோ தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.போலி வீடியோவால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழல் நிலவியது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்துள்ளார்.
https://www.thanthitv.com/flash-news/north-indians-issue-bjp-173374