உங்களுக்கு நாள் கணக்கில் மாதவிடாய் தள்ளிப் போகிறதா? கவலை விடுங்க.. இதோ சில டிப்ஸ்


பொதுவாக எல்லா பெண்களும் இந்தவொரு பிரச்சினையை ஒரு தடவையாவது அனுபவித்து இருந்து இருப்போம்.

சில சமயங்களில் மாதவிடாய் இரத்த போக்கு வராமல் போகலாம் அல்லது தள்ளிப் போகலாம்.

இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

.

நிறைய பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

இதுவே பின்னாளில் அவர்களுக்கு குழந்தை பேற்றில் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறது.

ஆகவே இதனை ஆரம்பத்திலே போக்க ஒரு சில எளியவழிமுறைகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். 

உங்களுக்கு நாள் கணக்கில் மாதவிடாய் தள்ளிப் போகிறதா? கவலை விடுங்க.. இதோ சில டிப்ஸ் | Are You Getting Late Periods

  • 3 கிராம் கொத்தமல்லியை 150 ml தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் இரண்டு முறை குடித்தால் மாதவிடாய் நாட்கள் சீராகும். இதேபோல் சீரகத்தையும் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.
  • பப்பாளியை அப்படியே உண்டால் ஈஸ்ட்ரோஜின் ஹார்மோனைத் தூண்டு மாதவிடாயைத் தூண்டும். தினமும் இரண்டு வேளை பப்பாளி உண்ணுங்கள்.
  • இஞ்சுடன் சிறிதளவு கொத்தமல்லித் தழை சேர்த்துக் கொதிக்க வைத்து அருந்தினால் கருப்பை சுற்றிலும் வெப்பம் அதிகரிக்கும். பின் இரத்த போக்கும் தடையின்றி வரும். தேவைப்பட்டால் டீயில் தேன் கலந்துகொள்ளலாம். வெறும் வயிற்றில் மாதவிடாய்க்கு 3 நாட்களுக்கு முன்னரே குடிக்கத் துவங்குங்கள்.
  •  வெந்தையத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் மாதவிடாய் தள்ளிப் போவது நிற்கும். வெந்தையத்தை இரவு ஊற வைத்து மறுநாள் மென்று விழுங்கலா அல்லது அரைத்து தண்ணீரில் கரைத்தும் குடிக்கலாம். 
  •  வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களை உண்ணலாம். உதாரணமாக சிட்ரஸ் பழங்கள், கிவி , தக்காளி, புரக்கோலி என தினசரி உணவோடு உண்ணலாம்.
  • வெல்லம் , மஞ்சள், பேரிச்சை, மாதுளை , கரட் , பாதாம், அன்னாசி, திராட்சை, முட்டை, தயிர் போன்ற புரோட்டீன் நிறைந்த உணவுகள், கருப்பு எள், கருஞ்சீரகம் என உண்டு வந்தாலும் மாதவிடாய் தள்ளிப் போவதைத் தடுக்கலாம்.

குறிப்பு 

மாதவிடாய் வரவில்லை, மாதம் கணக்கில் தள்ளிப் போகிறதெனில் கட்டாயம் மருத்துவரை அணுகவும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.