பஜாஜ் பல்சர் NS160, NS200 விற்பனைக்கு வந்தது

புதிய மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் NS160 மற்றும் NS200 என இரு பைக்குகளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப் சைடு டவுன் ஃபோர்க் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் என இரண்டு முக்கிய அம்சங்களையும் பெற்றுள்ளது.

முன்பாக பயன்படுத்தப்பட்டு வந்த டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் நீக்கப்பட்டு சிறப்பான சஸ்பென்ஷனை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி என்ஜின் உட்பட டிசைன் அம்சங்களில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.

பஜாஜ் பல்சர் NS160, NS200

NS160 பைக்கில் 17.03 bhp பவர் மற்றும் டார்க் 14.6 Nm வெளிப்படுத்தும் 160.3cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஐந்து வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக., NS200 பைக்கில் 24.13 bhp பவர் மற்றும் டார்க் 18.74 Nm வெளிப்படுத்தும் 199.5cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஆறு வேக கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாடல்களும் பல்சர் 250 பைக்கில் உள்ள எடை குறைவான அலாய் வீல்களை பெற்றுள்ளது. இதன் காரணமாக, NS200 எடை, 159.5 கிலோவிலிருந்து 158 கிலோவாக குறைந்துள்ளது. NS160 முன்பை விட இப்போது அகலமான டயர்களை பெற்று எடை 1 கிலோ வரை உயர்ந்து முதல் 152 கிலோ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

2023 Pulsar NS160 – ₹ 1.35 லட்சம்

2023 பல்சர் NS200 ₹ 1.47 லட்சம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.