அண்ணாமலைக்கு எச்சரிக்கை.. டென்ஷனான டெல்லி… கூட்டணிக்கு கிரீன் சிக்னல்!

தமிழக பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்ப தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், மாநில செயலாளர் திலிப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் சிவபாலன் உள்ளிட்ட தலைவர்கள் முதல் பல நிர்வாகிகள் வரை கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமாகினர். இதனால் ஆவேசமான அண்ணாமலை அதிமுகவை தாக்கி பேசி பரபரப்பை கிளப்பினார்.

”பாஜகவில் இருந்து ஆட்களை சேர்த்துதான் அதிமுக வளரவேண்டும் போல… பாஜக நிர்வாகிகளை அதிமுக வேட்டையாட தொடங்கியுள்ளது… அதுபோல நான் அதிமுகவில் இருப்பவர்களை வாங்க வேண்டி இருந்தால் என்னோட லிஸ்ட் பெருசாக இருக்கும்… அதற்கான நேரத்தையும் இடத்தையும் விரைவில் முடிவு செய்வேன்” என அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு, அண்ணாமலையின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுவதாக அதிமுகவினர் விமர்சித்தனர்.

இருப்பினும் அண்ணாமலையின் பேச்சால் கொந்தளித்த பாஜகவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து கண்டனம் தெரிவித்தனர். கூட்டணி தர்மத்தை மீறியதாக

மீது குற்றச்சாட்டும் வைத்தனர். இதனால் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடருமா என்பதே கேள்வி குறியாக இருந்தது.

இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கடந்த 10 ஆம் தேதி பாஜக அலுவலக திறப்பு விழாவிற்காக கிருஷ்ணகிரிக்கு வருகை தந்தார். அப்போது அவர் பாஜக நிர்வாகிகளை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அவர் அதிமுகவுடன் சுமூகமாக செல்ல வேண்டும். அதிமுக தொண்டர்களுடன், தலைவர்களுடன் வம்பு வளர்க்க வேண்டாம். அதிமுக தலைமை குறித்து எந்த குறையையும் சொல்லக்கூடாது. இதை தமிழக பாஜக தலைவரும், நிர்வாகிகளும், தொண்டர்களும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ஜெ.பி. அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அதே நாளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று புறப்பட்ட ஜெ.பி. நட்டாவிடம் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜெ.பி. நட்டா எந்த பதிலையும் சொல்லாமல் கடந்து சென்றார். அது பாஜக – அதிமுக கூட்டணி கேள்வி குறிதானோ என்ற சந்தேகத்தை கிளப்பியது. இந்த நிலையில், அதிமுகவுடன் சுமூகமாக செல்ல வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஜெ.பி. நட்டா கண்டிப்புடன் கூறியுள்ளதால் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பது உறுதி என்று தெளிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.