புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி சி33 2023 எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது.
தற்போது சி33 2023 எடிஷனை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்:
- 6.5 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
- யூனிசாக் டி612 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
- 5,000mAh பேட்டரி
- 10 வாட்ஸ் சார்ஜிங் திறன்
- பின்பக்கத்தில் இரண்டு கேமரா. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமரா இடம் பெற்றுள்ளது
- 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ்
- 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
- 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- இதன் விலை முறையே ரூ.8,999, ரூ.9,999 மற்றும் ரூ.10,499 என தெரிவிக்கப்பட்டுள்ளது
- மூன்று வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும்