வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண்: சாதனை படைத்த முதல் பெண் ஓட்டுநர்| Asia’s first woman loco pilot now runs Vande Bharat Express

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மும்பை: ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமைக்குரிய சுரேகா யாதவ் என்ற பெண், வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேகா யாதவ். இவர், கடந்த 1988 ம் ஆண்டு, ரயில்வே ஓட்டுநரானார். இதன் மூலம் இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. 1989 ல் துணை ஒட்டுநராக பணியை துவக்கிய அவர், 1996ல் சரக்கு ரயில் ஓட்டுநராக ஆனார். 2000ம் ஆண்டில் பயணிகளை இயக்கும் மோட்டார் உமென் என பல பணிகளை ஆற்றிய அவர், 2020ல் மும்பை – புனே டெக்கான் குயின் ரயிலை இயக்கினார். 34 ஆண்டு பணிக்காலத்தில், சிறப்பான பணிக்காக பல்வேறு விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

latest tamil news

இந்நிலையில், வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. நேற்று (2023 மார்ச் 13) அவர், சோலாப்பூர் – மும்பை இடையே இயக்கப்படும் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கி சாதனை படைத்தார். சோலாப்பூரில் ரயிலை கிளப்பிய அவர், நிர்ணயிக்கப்பட்டதில் 5 நிமிடங்களுக்கு முன்பே 450 கி.மீ., பயணத்தை முடித்து மும்பை வந்தடைந்தார். இதற்காக, ரயில் நிலையத்தில் அவருக்கு பாராட்டு விழா நடந்தது.

அவரை பாராட்டி ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வந்தே பாரத்திற்கு, சுரேகா யாதவ் மூலம் புது சக்தி அளிக்கப்பட்டது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய முதல் பெண் சுரேகா யாதவ் என பாராட்டி உள்ளார். மத்திய ரயில்வேயும் சுரேகா யாதவை பாராட்டி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.