பால்கன் நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்த மூலிகை மருத்துவர் ஆவார்.
1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த இந்த பெண் 1996 ஆம் ஆண்டில் தனது 84 வது வயதில் இறந்து போனார்.
வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளன.
குறிப்பாக இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடங்கி பல்வேறு சர்வதேச விஷயங்கள் அப்படியே நடந்துள்ளது.
இவரது கணிப்புகளில் சுமார் 85% அப்படியே துல்லியமாக நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
5079ஆம் ஆண்டு வரை இவர் கணிப்புகளைச் செய்துள்ளார். அந்தவகையில் 2023 என்ன நடக்கும் என்பதை கணித்தார். அதில் ஒரு சூரிய புயல் ஒன்று பூமியை தாக்கும் என்று கணித்திருந்தார்.
சூரிய புயல்
பாபா வாங்கா 2023இல் சூரிய புயல் ஏற்படும் என்று கணித்திருக்கின்றார்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் இந்த மெகா சூரிய புயலால் பூமியிலும் பிரச்சினை ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சூரியன் மீது இருந்து வரும் மின்காந்த ஆற்றல் பூமியைப் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. அவை பூமியில் உள்ள மின் கட்டமைப்பு மற்றும் ஜிபிஎஸ் சிக்னல்கள் உட்பட பல்வேறு அமைப்புகளைப் பாதிக்கும் என்று கூறப்படுகின்றது.
பாதிப்பு
2023ஆம் ஆண்டில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் பட்சத்தில், அது உலகெங்கும் மிகப் பெரிய மின்சாரத் தடையை ஏற்படுத்தலாம்..
நமது தகவல் தொடர்பு முற்றிலும் முடங்க வாய்ப்பிருக்கிறது.
போக்குவரத்து அமைப்புகளை முடங்கும்.. இதன் காரணமாக சமூக குழப்பங்களும் நிதி நெருக்கடிகளும் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இதில் ஏற்படும் பாதிப்புகள் அடுத்த சில ஆண்டுகள் வரையிலும் தொடரும் ஆபத்தும் உள்ளது என்றே வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து டாக்டர் எரிகா பால்மெரியோ கூறுவது,
சூரியனின் பூமத்திய ரேகைக்கு உள்ள காந்த இழை மிகப்பெரிய அளவிலான காந்தப்புலக் கோடுகளைக் கொண்டுள்ளது.
அதாவது இது வெடித்து சூரிய புயல் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
இதுபோன்ற சக்தி வாய்ந்த ஸ்ட்ரீமர்கள் இருப்பது அதீத சூரிய செயல்பாட்டின் அறிகுறியாகும்.
இந்த ஸ்ட்ரீமர் வெளியேறினால், இது ஒரு பெரிய அளவிலான கதிர்வீச்சு மற்றும் காந்த ஆற்றலை வெளியிடும்.
இது பூமியிலும் தொலைத் தொடர்புகளைப் பாதிக்கும். இருப்பினும், இது பூமியை நோக்கி வெடித்துச் சிதறுமா என்பது துல்லியமாகத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.