மும்பை,
இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
4 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்தியாவும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.அகமதாபாத்தில் நடந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் நேற்று டிராவில் முடிவடைந்தது
இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் கில் , மற்றும் புஜாரா பந்து வீசினார்கள். புஜாரா பந்து வீசியதை ரவிச்சந்திரன் அஸ்வின் கிண்டலடித்திருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில்,
‘நான் இப்போது என்ன செய்ய வேண்டும் ? பவுலிங் வேலையைவிட்டு போய்விடவா?’ என்று ஹிந்தியில் கேட்டுள்ளார்.அஸ்வினின் இந்த கிண்டலுக்கு அவரது பாணியிலேயே பதில் கொடுத்திருக்கிறார் புஜாரா.
‘நாக்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கி பேட்டிங் செய்ததால் , அதற்கு நன்றி செலுத்தும் விதமாக நான் இந்த பவுலிங் செய்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் ஆட்ட நேர முடிவில் முதல் விக்கெட்டை இழந்த பிறகு அஸ்வின் அடுத்த விக்கெட்டுக்கு களமிறங்கினார்.
Main kya karu? Job chod du? pic.twitter.com/R0mJqnALJ6
— Ashwin (@ashwinravi99) March 13, 2023
Nahi. This was just to say thank you for going 1 down in Nagpur https://t.co/VbE92u6SXz
— Cheteshwar Pujara (@cheteshwar1) March 13, 2023