விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு அனுமதி பெறாமல் பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டு வந்த தனியார் காப்பகத்தில், போதைப்பொருள் கொடுத்து, வயதானவர்களை மனநலம் பாதிக்கச் செய்து மதமாற்றம் செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே குண்டலபுலியூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்ததால் கடந்த பிப்ரவரி 10-ம் தேதி போலீஸாரும், அரசு அதிகாரிகளும் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் […]