ராகுல் காந்தியின் லண்டன் உரை; இதெல்லாம் சரி வராது- பாஜக எம்பி ஹேம மாலினி டென்ஷன்!

சமீபத்தில் லண்டன் சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவின் நாடாளுமன்றம், பத்திரிகை, தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்கள் சிலரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக விமர்சனம் முன்வைத்தார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக, பிரதமர் மோடி மாற்று, ஆர் எஸ் எஸ் அமைப்பு பற்றி பேசினார். எதிர்க்கட்சி தலைவர்களிடம் இந்தியாவின் நிலை குறித்து கேட்டால் உங்களுக்கே நன்றாக தெரியும் எனவும், என்னுடைய தொலைபேசி ஒட்டுகேட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பெகாஸஸ் முறைகேடு பற்றி பேசிய ராகுல் காந்தி, எங்களுடைய ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததே இல்லை என குறிப்பிட்டார். இந்தியாவின் இந்த பிரச்சனையை சரிசெய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகள் தலையிட வேண்டும் என பேசியது அடுத்த சர்ச்சையை கிளறியது.

இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவின் பெருமையை லண்டன் சென்று அவமானப்படுத்தியதாகவும், இதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கூறிவந்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக அமளி ஏற்பட்டது. ராகுல் காந்தி மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே; பிரதமர் மோடி சீனா சென்றபோது இந்தியாவின் அரசியல் குறித்து பேசி இருந்தார்.

மீண்டும் அதானி சர்ச்சை; பட்ஜெட் தொடரின் 2வது அமர்வில் எதிர்க்கட்சிகள் பக்கா பிளான்!

அது சரியானதா என கேள்வி எழுப்பினார். இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே அதானி பிரச்சனையால் நாடாளுமன்றத்தில் இரு கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுவந்த நிலையில், தற்போது புது பிரச்சினை எழுந்துள்ளது.

இது பேசிய பேசிய நடிகையும், பாஜக எம்பியுமான ஹேம மாலினி; நம்முடைய பிரதமர் இந்தியாவின் புகழ் உலகெங்கிலும் பரவ வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறார். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அயல் நாடு சென்று இந்தியாவை பற்றி அவதூறாக பேசுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது நாடாளுமன்றத்தில், இந்தியாவிற்குள் பேசி முடிக்க வேண்டும். தொடர்ந்து பேசிய ஹேம மாலினி; ஆஸ்கர் விருது வாங்கிய தெலுங்கு படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாட்டு நாட்டு பாடல் மற்றும் இந்திய ஆவணப்படமான ‘Elephant whispers’ ஆகிய இரண்டுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதற்கு முன்னதாக பேசிய பியூஸ் கோயல்; ராகுல் காந்தியின் பெயர் குறிப்பிடாது, மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் நம்முடைய நாட்டின் நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தியுள்ளார். இந்தியாவின் பெருமையை லண்டன் சென்று அங்கிருப்போர் முன்னிலையில் தரம் தாழ்த்தி பேசியது குறித்து நாங்கள் நேற்றே குறிப்பிட்டு இருந்தோம். அடுத்ததாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்; ராகுல் காந்தியின் செயலுக்கு அவர் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.