”உக்ரைனின் எதிர்காலம் பக்முட் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது” ஜெலென்ஸ்கி


உக்ரைன் நாட்டின் எதிர்காலம் பக்முட் மற்றும் மற்ற முக்கிய நகரங்களின் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

பக்முட்டில் கடுமையான போர்

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இப்போரில் லட்சக்கணக்கான மக்களும், ராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர். உக்ரைனிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்கின்றனர்.

”உக்ரைனின் எதிர்காலம் பக்முட் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது” ஜெலென்ஸ்கி | Zelenskyy Says Future Depends On Bakhmut@pbs

தற்போது கடுமையாக நடைபெற்று வரும் இப்போரில் ரஷ்யா உக்ரைனின் பக்முட் என்ற நகரைக் கைப்பற்றப் போராடி வருகிறது. மறுமுனையில் உக்ரைனும் கடுமையான ராணுவ தாக்குதலை நடத்துகிறது. மேலும் ஏற்கனவே ரஷ்யா பக்முட் நகரின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றியுள்ளது.

உக்ரைனின் எதிர்காலம்

“கிழக்கு பகுதியை இழந்தது வேதனையளிக்கிறது, நாம் ரஷ்யாவின் ராணுவ சக்தியை அழிக்க வேண்டும், நாம் அதை அழிப்போம்” என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

”உக்ரைனின் எதிர்காலம் பக்முட் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது” ஜெலென்ஸ்கி | Zelenskyy Says Future Depends On Bakhmut@gettyimages

பக்முத்தை கைப்பற்றுவது டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் மற்ற பகுதிகளைக் கைப்பற்ற அனுமதிக்கும் என ரஷ்ய தரப்பு தெரிவிக்கிறது. ஆனால் கடந்த வாரங்களில் இரு தரப்பினருக்கும் பாரிய எண்ணிக்கையில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று உக்ரைனிய வீரர்கள் நகரில் ரஷ்ய ராணுவத்திற்குப் பெரிய இழப்பு ஏற்படுத்தும் அளவிற்குத் தாக்குதல் நடத்தியுள்ளது.

”உக்ரைனின் எதிர்காலம் பக்முட் வெற்றியைப் பொறுத்தே இருக்கிறது” ஜெலென்ஸ்கி | Zelenskyy Says Future Depends On Bakhmut@pbs

ரஷ்யா எல்லையை ஒட்டியுள்ள நகரங்களைப் பற்றிப் பேசிய ஜெலென்ஸ்கி “நமக்கு எந்த வகையான எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதை எல்லைப் பகுதியிலுள்ள நகரங்களின் வெற்றியே தீர்மானிக்கிறது, அங்கு உக்ரேனியர்களின் எதிர்காலமும் போராடப்படுகிறது” என்று கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.