தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் அதே சமயத்தில் அமைச்சராகவும் செம பிசியாக வலம் வருகின்றார் உதயநிதி. குருவி படத்தின் மூலம் தயாரிப்பாளரான
உதயநிதி
ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி வெற்றிகண்டார். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த உதயநிதி மெல்ல மெல்ல தன் நடிப்பு திறனை வளர்த்துக்கொண்டார்.
மனிதன், கண்ணே கலைமானே, நிமிர், சைக்கோ என தொடர்ந்து தரமான படங்களில் நடித்து பாராட்டை பெற்று வருகின்றார் உதயநிதி. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான திரைப்படங்களை உதயநிதி தான் வாங்கி வெளியிட்டு வருகின்றார்.
Tamannaah: பிரபல நடிகருடன் லிப்லாக்..விரைவில் திருமணமா ? விளக்கம் அளித்த தமன்னா..!
இதன் காரணமாக சில சர்ச்சைகளிலும் சிக்கி வந்தார் உதயநிதி. தற்போது தமிழ் சினிமாவே உதயநிதியின் கையில் தான் உள்ளது என சிலர் விமர்சித்தனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாத உதயநிதி தொடர்ந்து படங்களை வாங்கி வெளியிட்டு வந்தார்.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அமைச்சரான உதயநிதி மாமன்னன் படத்திற்கு பிறகு இனி நடிக்கப்போவதில்லை என அறிவித்தார். மேலும் ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் படத்திலிருந்தும் விலகினார் உதயநிதி. எனவே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் தான் உதயநிதியின் கடைசி திரைப்படம் என்பது உறுதியானது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் வடிவேலு, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இப்படத்தை உதயநிதியே தயாரித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபலமான OTT நிறுவனம் ஒன்று 25 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம்.
உதயநிதியின் படங்களிலேயே மாமன்னன் திரைப்படம் தான் அதிக விலைக்கு OTT நிறுவனத்தால் வாங்கப்பட்ட திரைப்படமாம். இதற்கு முழு காரணம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தான் என்கின்றனர் ரசிகர்கள்.
தன் கடைசி படத்திற்கு இவ்வளவு மவுசா என உதயநிதியே இன்ப அதிர்ச்சியில் இருக்கிறாராம். இதைத்தொடர்ந்து விரைவில் மாமன்னன் திரைப்படம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.