வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குருகிராம்: ஓடும் காரில் இருந்து கொண்டு கரன்சி நோட்டுகளை வீசியதாக யூடியூப்பரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
அரியானா மாநிலம் குருகிராம் டி.எல்.எப்.கோல்ப் கோர்ஸ் சுரங்கப்பாதை வழியாக கடந்த 2-ம் தேதியன்று இரவில் வெள்ளை நிற கார் சென்று கொண்டிருந்தது. அக்காரின் டிக்கியில் இருந்து கொண்டு முகக்கவசம் அணிந்த நபர் கரன்சிகளை வீசி சென்றார். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையடுத்து குருகிராம் போலீசார் அங்கு வைத்திருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து வெள்ளை நிற காரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், கரன்சிகளை வீசிய நபர் டில்லி திலகர் நகரைச் சேர்ந்த யூடியூப்பர் ஜோரேவர் சிங் கல்சி என்பது தெரியவந்தது. அவருடன் காரை ஓட்டி வந்த டிரைவரும் கைது செய்யப்பட்டனர்.
‘பர்ஸி’ என்ற வெப் சீரிஸ் -ல் வரும் காட்சியை போன்று வீடியோ உருவாக்கி, யூடியூப்பில் பதிவேற்றவே இது போன்ற வெட்டி வேலையை செய்ததாக கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement