ராஜஸ்தானில் 56 பிளேடுகளை விழுங்கிய 25 வயது இளைஞர் உயிர் பிழைத்துள்ளார்.
56 பிளேடுகளை விழுங்கிய இளைஞர்
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், ஜலோர் மாவட்டம் சாஞ்சோர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சவரம் செய்யக்கூடிய 56 பிளேடுகளை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் ரத்த வாந்தி எடுத்து வயிற்று வலியை உணர்ந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
அவர் உடனடியாக சாஞ்சூரில் உள்ள மெடிபல்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர் அவருக்கு முதலில் எக்ஸ்ரே எடுத்தபோது, அவரது வயிற்றுக்குள் சில உலோக பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு அவர் சோனோகிராஃபிக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவரது வயிற்றில் பிளேடுகள் தெளிவாகத் தெரிந்தது.
Representative Image
மேலும் உறுதி செய்வதற்காக மருத்துவர்கள் எண்டோஸ்கோபியும் நடத்தினர், அதன் அடிப்படையில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை
\மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்கள் அவரது வயிற்றிலிருந்து சுமார் 56 பிளேடுகளைப் பிரித்தெடுத்தனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, கவருடன் பிளேட்டை சாப்பிட்டதால் வலியோ, சாப்பிடும் போது வெட்டுக்காயமோ ஏற்படவில்லை. ஆனால் வயிற்றுக்குள் காகிதம் கரைந்த பிறகு, பிளேடு உடலை காயப்படுத்தத் தொடங்கியது என்று மருத்துவர் கூறினார்.
அந்த இளைஞன் சஞ்சூரில் உள்ள டேட்டா கிராமத்தில் வசிக்கும் யஷ்பால் சிங் (Yashpal Singh) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அங்கு அவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிகிறார். ஆனால், பிளேடு சாப்பிட்டதற்கான காரணத்தை யஷ்பால் தெரிவிக்கவில்லை.