புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு


நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய புகையிரத சேவைகளை முறையாக முன்னெடுப்பதற்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புகையிரத திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி நாளை (15.3.2023) காலை அவிசாவளையில் இருந்து கொழும்பு நோக்கி காலை 5.00 மற்றும் 5.45 மணிக்கும், சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி அதிகாலை 4.50 மற்றும் 5.50 மணிக்கு இரண்டு புகையிரத சேவைகளும் இயக்கப்படவுள்ளன.

ரம்புக்கனையில் இருந்து காலை 5.25 மற்றும் 5.57 மணிக்கும், கனேவத்தையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கும், மஹவயில் இருந்து 4.45 மணிக்கும், கண்டியில் இருந்து 5.00 மணிக்கும் கொழும்புக்கு இரண்டு புகையிரதங்கள் இயக்கப்படவுள்ளன.

கரையோரப் பிரதேசத்தில் பெலியத்தவிலிருந்து அதிகாலை 4.15 மணிக்கும், காலியிலிருந்து 5.00 மணிக்கும், அளுத்கமவில் இருந்து 6.00 மணிக்கும், தெற்கு களுத்துறையிலிருந்து கொழும்புக்கு காலை 7.00 மணிக்கும் புகையிரத சேவைகள் இயக்கப்படவுள்ளன.

பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு 

புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்து, நாட்டின் பொது ஒழுங்கை பேணுவதற்கும், இடையூறுகளைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு | Railway Strike Tommorrow Today

அதன்படி, பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள், தங்களின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள ஒவ்வொரு புகையிரத நிலையத்தையும் உள்ளடக்கும் வகையில் போதிய பாதுகாப்பை வழங்குவதுடன், பொறுப்பான கண்காணிப்பு அதிகாரியுடன், அதிகாரிகள் குழுவை முக்கிய நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், புகையிரத ஊழியர்களும், அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளிக்கும் போதும், சேவையை முன்னெடுக்கும் போதும் அவர்களுக்குத் தேவையான முழுமையான பாதுகாப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புகையிரத பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு! பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு | Railway Strike Tommorrow Today

புகையிரதங்களை இயக்கும் போது கல் வீச்சு அல்லது ஏதேனும் குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளைத் தடுக்க தகுந்த பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்த, பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்கிரமரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சிறப்பு முன்னேற்பாடுகள் இன்று (14) நள்ளிரவு முதல் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.   



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.