அதிகரித்து வரும் மூத்த குடி மக்கள் பிரச்சினையை சமாளிக்க ஓய்வு பெறும் வயதை உயர்த்த சீனா முடிவு செய்துள்ளது.
“ஓய்வு பெறும் வயதை நெருங்கும் நபர்கள் பல மாதங்களுக்கு ஓய்வு பெறுவதை தாமதப்படுத்த வேண்டும்” என்று அதிபர் ஜின்பிங் கூறினார். மக்கள் தங்கள் சூழ்நிலைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப எப்போது ஓய்வு பெறுவது என்பதைத் தேர்வுசெய்ய அனுமதிப்பதே சீர்திருத்தமாகும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை, தற்போது, சீனாவின் ஓய்வூதிய வயது ஆண்களுக்கு 60 ஆகவும், பணிபுரியும் பெண்களுக்கு 55 ஆகவும் உள்ளது. அதேசமயம், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் ஓய்வு வயது 50 ஆக உள்ளது.