ஐரோப்பாவிற்கு வெளியே முதல் பேட்டரி ஆலையை அமைப்பதற்காக கனிமங்கள் நிறைந்த கனடாவை ஃபோக்ஸ்வாகன் வாகன உற்பத்தி நிறுவனம் தேர்வு செய்துள்ளது.
இது கனடாவின் மின்சார வாகனத் துறையில் மிகப்பெரிய ஒற்றை முதலீடாக மாற உள்ளது.உலகெங்கிலும் உள்ள நாடுகள் வாகனங்களின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதை இலக்காகக் கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி வருகின்றன.
இதன் காரணமாகவே கனடா அரசு பல பில்லியன் டாலர்களை பசுமை தொழில்நுட்பத் திட்டங்களில் முதலீடு செய்கிறது. லித்தியம், நிக்கல் மற்றும் கோபால்ட் உள்ளிட்ட பேட்டரிகளுக்கான முக்கிய மூலப்பொருட்கள் கிடைப்பதில் கனடா வளமாக உள்ளது, மேலும் இது ஒரு பெரிய சுரங்கத் துறையின் தாயகமாகும்.