திமுக எம்பி திருச்சி சிவா வீட்டின் மீது அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் நடத்தியுள்ளனர்.
திமுக எம்.பி-யான திருச்சி சிவா இவரது வீட்டின் அருகில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிலையில் இந்த திறப்பு விழாவிற்கான அழைப்பிதழில் எம்.பி சிவாவின் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் திமுக அமைச்சர் கே.என் நேரு பங்கேற்ற நிலையில் திமுக எம்பி சிவாவின் ஆதரவாளர்கள் எதிராக கோஷமிட்டு காரை வழிமறித்து உள்ளனர்.
இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருக்கு எதிராக கோஷமிட்டதால், திருச்சி சிவாவின் வீட்டின் மீது அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த வகையில் திமுக எம்.பி திருச்சி சிவாவின் கார் கண்ணாடி, வீட்டில் இருந்த நாற்காலி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் நேருவின் காரை வழிமறித்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.