அந்தரங்க காட்சியில் நடித்ததால் என் மகனை இழந்தேன்! மனமுடைந்த பிரபல நடிகை


பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன், நிர்வாணக் காட்சியில் நடித்ததால் தன் மகனை விட்டு விலகி இருக்க நேர்ந்ததாக வேதனை தெரிவித்தார்.

ஷரோன் ஸ்டோன்

1992ஆம் ஆண்டு வெளியான Basic Instict என்ற படத்தில் பிரபல நடிகை ஷரோன் ஸ்டோன் நிர்வாணக் காட்சியில் நடித்திருந்தார்.

அதற்காக அவர் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

எனினும் விருது பெறும் விழாவில் தான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது மகன் குறித்து அவர் பேசும்போது, ‘என் மகன் சின்னஞ் சிறுவனாக இருந்தபோது நீதிபதி அவனிடம் கேட்டார், உன் அம்மா ஆபாச திரைப்படங்களை தயாரிப்பது உனக்கு தெரியுமா? என்று. அது இந்த அமைப்பின் ஒரு வகையான துஷ்பிரயோகம்.

ஷரோன் ஸ்டோன்/Sharon Stone

Sony Pictures

அந்த படத்தை தயாரித்ததால் நான் எப்படிப்பட்ட பெற்றோராக கருத்தப்பட்டேன் என்பதும் துஷ்பிரயோகம். அதனால் மகனை என்னுடன் வைத்துக் கொள்ளும் உரிமையை இழந்துவிட்டேன்’ என தெரிவித்தார்.

விவாகரத்து

ஸ்டோனின் கணவர் 2003ஆம் ஆண்டு விவாகரத்து கோரினார். அதன் பின்னர் அவர்களது தத்துப் பிள்ளையை யார் வைத்துக் கொள்வது என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

அப்போது நடந்த சம்பவங்களை தற்போது ஸ்டோன் வேதனையுடன் நினைவுகூர்ந்துள்ளார்.  

ஷரோன் ஸ்டோன்/Sharon Stone

@Getty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.