Atlee: என்ன அட்லீ இப்படி பண்ணீட்டிங்க..அட்லீ செய்த காரியம்.அப்சட்டில் விஜய் ரசிகர்கள்..!

தளபதியின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ தற்போது பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தவர் தான் அட்லீ. என்னதான் இவரின் படங்கள் சில விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவே அமைந்துள்ளது.

குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு அட்லீயின் மேல் தனி பிரியம் இருக்கின்றது. ஏனென்றால் விஜய்யின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் அட்லீயின் படங்களுக்கு அதிக பங்கு உண்டு. குறிப்பாக தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வசூல் சாதனையை பற்றி நம் அனைவர்க்கும் தெரியும்.

Kamal: வாய்ப்பளித்து வாழ்வு தரும் கமல்..ஒருவேளை இதுதான் காரணமா ?

இதையடுத்து அட்லீ தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகின்றார். என்னதான் இப்படம் பாலிவுட் படம் என சொன்னாலும் நயன்தாரா, யோகி பாபு, விஜய் சேதுபதி, அனிருத் என ஏகப்பட்ட தமிழ் கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68 ஆவது திரைப்படத்தை அட்லீ தான் இயக்குவார் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் வந்த செய்தி ஒன்று விஜய் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாவதாக இருந்த நிலையில் தற்போது இப்படம் அக்டோபரில் வெளியாகவுள்ளதாம்.

அதுவும் லியோ படம் வெளியாகும் அக்டோபர் 19 தேதியன்றே ஜவான் படம் வெளியாகவுள்ளதாம். சமீபத்தில் வந்த ஷாருக்கானின் பதான் படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து ஜவான் படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

மேலும் வசூலில் ஆயிரம் கோடியை எட்டும் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அப்படம் லியோ படத்துடன் மோதவுள்ளது. லியோ படத்தின் மூலம் மிகப்பெரிய வசூல் சாதனையை விஜய் செய்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அந்த வசூலுக்கு செக் வைக்கும் விதமாக ஜவான் லியோவுடன் மோதுகிறது.

இதனால் விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீயே இப்படி விஜய்யுடன் மோதுகின்றாரே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆனால் ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.