பார்ஸி இணையத் தொடர் காட்சியை மீண்டும் உருவாக்க ஓடும் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த யூடியூபர்கள் இருவர் கைது..!!

அரியானா: அரியானாவில் வெப் தொடரில் ஒன்றில் வரும் காட்சியை போல ரூபாய் நோட்டுகளை வீசி எரிந்து வீடியோ எடுத்த யூடியூபர்களை போலீசார் கைது செய்தனர். அரியானாவில் குருகிராம் நகரில் இரவு நேரத்தில் ஓடும் காரில் இருந்து இளைஞர் ஒருவர் ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்த காட்சிகள் சமூக  வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இளைஞர் ஒருவர் காரை ஒட்டி செல்ல டிக்கியில் துணியால் முகத்தை மறைத்து கொண்டு அமர்ந்திருந்த மற்றொரு இளைஞர் ரூபாய் நோட்டுகளை வீசி எறியும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். ரூபாய் நோட்டுகளை வீசி எறிந்து வீடியோ எடுத்தவர்கள் அரியானாவில் மிகவும் பிரபல யூடியூபர்களான ஜோராவர் சிங், குர்ப்ரீத் சிங் என்பதை அறிந்த போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். கடந்த மாதம் 10-ம் தேதி தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான பார்ஸி இணையத்தொடரில் வரும் காட்சியை மீண்டும் உருவாக்கும் முயற்சியாக யூடியூபர்கள் இருவரும் கோல்ப் மைதான சாலையில் காரில் இருந்து ரூபாய் நோட்டுகளை வீசியதாக போலீசார் தெரிவித்தனர். இயக்குனர்கள் ராஜ் அண்ட் டிகே இயக்கத்தில் உருவான பார்ஸி வெப் தொடரில் ஷாகித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.